வவுனியாவில் புதிய பல்கலைக்கழகம் – வர்த்தமானி வௌியீடு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், 'இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்' என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,...

இன்று முதல் கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி

கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (09) முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை மைய்யப்படுத்தி, இந்த நடவடிக்கை இன்று (09) ஆரம்பிக்கப்படும் என்றனர். தடுப்பூசியை...

மேலும் ஒரு மில்லியன் சினோபாம்டோஸ் இலங்கையை வந்தடைந்தது

சீனாவின் சினோபாம் கொவிட்-19 தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. இன்று (09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த தொகுதிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக, இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட...

ரிஷாட் மற்றும் பிரேமலால் பாராளுமன்ற வருகை

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் இன்று (08) இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை பாராளுமன்றத்துக்கு அழைப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு...

ஓய்வூதிய கொடுப்பனவு திகதி அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 10 ஆம் திகதி ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள செல்லுவோருக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்க முப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் குறித்த...

இலங்கை கடல் தொடர்பில் சர்வதேச கடல்சார் அமைப்பின் முக்கிய அறிவிப்பு

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலினால் ஏற்படக்கூடிய இரசாயன சேதங்கள், பிளாஸ்டிக் துணிக்கைகள் வடிவில் கரைக்கு வரும் குப்பைகளின் ஆபத்துகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.

பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பில் தீர்மானம் இல்லை

தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியில்...

பாராளுமன்ற கூட்டத்தை நாளை நடாத்த தீர்மானம்

இவ்வார பாராளுமன்ற அமர்வை நாளை (08) மாத்திரம் மு.ப. 10.00 - பி.ப. 4.30 வரை நடாத்த இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373