Jurassic Park பட நடிகர் காலமானார்

ஒஸ்கார் விருது வென்ற மற்றும் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களான ‘The Piano’ மற்றும் ‘Jurassic Park’ போன்ற மூலம் புகழ்பெற்ற, நியூசிலாந்தின் பன்முகத்திறன் கொண்ட நடிகரான சாம் நெய்ல் (Sam Neill) தனது 78 ஆவது வயதில் காலமானார்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அறிக்கையொன்றின் மூலம் இந்த நடிகரின் மறைவு அறிவிக்கப்பட்டது.

மரணத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, எனினும் 2022 ஆம் ஆண்டில் இரத்தப் புற்றுநோய் வகையான மூன்றாம் கட்ட பாதிப்பை நெய்ல் எதிர்நோக்கியிருந்தார்.

அண்மையில் தாம் புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

சாம் நெய்ல் தனது குடும்பத்தினரால் சூழப்பட்டிருந்தார், அத்துடன் அவரது வாழ்நாள் முழுவதையும் அடையாளப்படுத்திய அதே கண்ணியத்துடன் அவர் மறைந்தார்.

இந்த இழப்பு திடீரெனவும் எதிர்பாராததாகவும் அமைந்தது. அவரது மறைவு சர்வதேச திரையுலகை கவலையில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவு – பிரதமர் நரேந்திர மோடி...

பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தன்னுடைய ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “புகழ்பெற்ற...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘! திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

https://sendgb.com/pANxJ0tGoyI சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில்...