2023ஆம் ஆண்டு மாணவர் செவிலியர் ஆட்சேர்ப்புக்கான நேர்காணல்கள், ஊவா மாகாணத்தின் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
குறித்த நேர்காணல்கள் பதுளை செவிலியர் கல்லூரியில் காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டில் இதுவரை நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மாணவர் செவிலியர் ஆட்சேர்ப்புக்கான நேர்காணல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது


