விசா வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட டயானா கமகேவுக்கு ஜனவரி 14இல் தண்டனை அறிவிப்பு

செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்குத் தண்டனை விதிப்பதற்காக, குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அதற்கமைய, பிரதிவாதியான டயானா கமகேவை முன் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, பிரதிவாதியின் கைவிரல் அடையாளங்களைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

 

2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பில், குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு எதிராக இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இவ்வழக்கு இன்று (26) முற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பிரதிவாதியான டயானா கமகே நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

 

 

இதன்போது, பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி மொஹான் செனவிரத்ன நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், இக்குற்றச்சாட்டுக்களுக்குத் தாம் குற்றமற்றவர் என முன்னர் முன்வைத்த எதிர்வாதத்தைப் பிரதிவாதி மீளப் பெற்றுக்கொண்டு, அக்குற்றச்சாட்டுக்களுக்குக் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தார்.

 

 

அதற்கமைய, அவ்விடயத்தைப் பதிவு செய்து கொண்ட நீதவான், பிரதிவாதிக்குத் தண்டனை விதிப்பதற்காக இவ்வுழக்கை மீண்டும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்தினத்திற்கு முன்னதாகப் பிரதிவாதியின் கைவிரல் அடையாளங்களைப் பெற்று அறிக்கை கோருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ரோஹித ராஜபக்ஷ FCID யில் இருந்து வௌியேறினார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து...

பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேருக்குப் பிணை

அனுராதபுரம் ருவன்வெலி மகா சேய வளாகத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வணக்கத்துக்குரிய பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரை...