தெதுறு ஓயா உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

நிலவும் மழையுடனான வானிலையுடன் தெதுறு ஓயா மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்களின் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (25) இரவு வேளையில் தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளும் தலா இரண்டு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

இதன் மூலம் வினாடிக்கு 11,200 கன அடி நீர் தற்போது தெதுறு ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

இதன் காரணமாக, நீர்த்தேக்கத்திற்குக் கீழ்ப்பகுதியில் தெதுறு ஓயாவை அண்டி வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இதேவேளை, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும், தப்போவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும், லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

 

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டமும் தூனமலே பகுதியில் உயர்வடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ரோஹித ராஜபக்ஷ FCID யில் இருந்து வௌியேறினார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து...

விசா வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட டயானா கமகேவுக்கு ஜனவரி 14இல் தண்டனை...

செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்குத் தண்டனை விதிப்பதற்காக, குறித்த வழக்கை...