கொலொன்ன பிரதேச சபை பட்ஜெட்டில் NPP படுதோல்வி

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலுள்ள கொலொன்ன பிரதேச சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது.

 

 

 

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 9 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் பதிவாகிய நிலையில் தோல்வி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

கொலொன்ன பிரதேச சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பிரதேச சபையின் தவிசாளர் சம்பத் குணசிங்க தலைமையில் இன்று (25.11.2026) சபையில் முதன்முறையாகச் சமர்ப்பிக்கப்பட்டது.

 

 

 

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்திருந்தது.

 

 

 

கொலொன்ன பிரதேச சபையில் எதிர்க்கட்சிக்கு 10 ஆசனங்களும் ஆளுங்கட்சிக்கு 9 ஆசனங்களும் உள்ளன.

 

 

 

எவ்வாறாயினும் தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று குறைந்த ஆசனங்களை வென்றிருந்த தேசிய மக்கள் சக்தியிலிருந்து தவிசாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பலத்த மழையின் போது மலையகத்தில் நில அதிர்வு ஏற்படும் அபாயம்!

அதிக மழைவீழ்ச்சி நிலவும் காலப்பகுதியில் நாட்டின் மத்திய மலைநாட்டில் நில அதிர்வுகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்...

வாசுதேவ நாணயக்கார இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (25) ஆஜராகியுள்ளார்.       நடைபெற்று வரும் விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக...