இலங்கை நோக்கி நகரும் “கானி”

~Naushad Mohideen~

தித்வா புயல் இலங்கையை தாக்கி இன்றோடு (26.11.2026) ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.

 

இலங்கையின் 25 மாவட்டங்களையும் சேர்ந்த மொத்தம் 23 இலட்சம் பேர் தித்வா காரணமாக நேரடியாகப் பாதிக்கப்பட்டனர். 680 க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்ததாகவும், 154 பேர் காணாமல் போய் உள்ளதாகவும், இரண்டு லட்சத்து 33 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து வாழ்வதாகவும் உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் முடிந்தளவு நேசக்கரம் நீட்டி வருகின்றது. இருந்தாலும் பல நடைமுறை ரீதியான நிர்வாக சிக்கல்கள், உயர் மட்ட முடிவுகளை அமுல் செய்வதில், அதிகாரிகள் மட்டத்தில் காணப்படும் lethargic அல்லது மந்தமான செயற்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட பலரை இன்னும் உரிய நிவாரணங்கள் சென்டையவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் நீடிக்கின்றன.

 

இந்நிலையில் இலங்கையை தாக்கும் என எதிர்பார்க்கப்படும் இன்னொரு புயல் குறித்த அபாய அறிவிப்பை காலநிலை அவதான நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ளதாக அவதானிக்க முடிகின்றது. SL News Express என்ற ஆங்கில இணைய செய்தி மேடையில் இதை காண முடிந்தது.

 

வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நேற்று அவதானிக்கப்பட்ட இந்த வளிமண்டல மாற்றம், மலேஷியாவின் பின்துலு என்ற பகுதியின் கடல் பரப்பை மையமாக் கொண்டு உருவாகி வருகின்றது. தற்போது அது மேற்குப் பகுதியின் வடமேல் திசை ஊடாக நகர்ந்து நவம்பர் 27ல் அந்தமான் தீவுகள் வழியாக இலங்கையை நோக்கி நகரும் சாத்தியங்கள் உள்ளதாகவும், பெரும்பாலும டிசம்பர் மாதம் 5ம் திகதி திருகோணமலை வழியாக இலங்கையில் தரை தட்டலாம் என்றும் இன்றைய கணிப்பீடுகள் தெரிவிப்பதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

திருகோணமலையின் கொட்டியார குடா வழியாக நாட்டுக்குள் பிரவேசித்து பின்னர் வவுவனியா வழியாக மன்னார் – புத்தளம் கடல் பகுதிளை ஊடறுத்து அரபிக் கடல் பிரதேசத்தில் சங்கமிக்கும் என்று அதன் பயணப் பாதை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

 

வரப்போகும் இந்தப் புயலுக்கு “கானி” என்று பெயரும் இடப்பட்டுள்ளது. மாலைதீவு தான் இந்தப் பெயரை வழங்கி உள்ளது.

 

எவ்வாறாயினும் இந்தப் புயலின், மேற்குறிப்பிடப்பட்டுள்ள பயணப் பாதை இன்றைய நிலையின் அவதானிப்பு மட்டுமே என்றும், இதன் பயணப் பாதை சில வேளைகளில் மாற்றம் அடையலாம் என்றும், ஒரு வேளை இது தமிழ்நாட்டை கடந்து செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் மேலதிக தகவல்களில் காணக் கூடியதாகவும் உள்ளது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ரோஹித ராஜபக்ஷ FCID யில் இருந்து வௌியேறினார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து...

விசா வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட டயானா கமகேவுக்கு ஜனவரி 14இல் தண்டனை...

செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்குத் தண்டனை விதிப்பதற்காக, குறித்த வழக்கை...