இலங்கையின் கடன் தரவரிசையை ‘B-’ ஆக உயர்த்தியது ஃபிட்ச்

சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ், இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணயக் கடன் தரவரிசையை ‘CCC+’ இலிருந்து ‘B-’ ஆக இன்று (22) உயர்த்தியுள்ளது.

 

வெளிநாட்டு நிதியளிப்பு அபாயங்களைக் குறைக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

 

கட்டமைப்புச் சீர்திருத்தங்களால் வலுப்படுத்தப்பட்ட பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மைக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை, வெளிநாட்டு நிதியளிப்பு அபாயங்களைக் குறைத்துள்ளதுடன் பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் திறனையும் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 

எனினும், இலங்கையின் கடன் நிலைமை தொடர்ந்தும் அதிக கடன் மற்றும் கடன் சேவை விகிதங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு செலாவணி கையிருப்பு மிதமான மட்டத்திலேயே உள்ளதாகவும் ஃபிட்ச் எச்சரித்துள்ளது.

 

மேலும், அதிகரித்து வரும் எரிசக்தி விலைகள் காரணமாக, மூன்று ஆண்டுகளாக உபரியில் காணப்பட்ட இலங்கையின் நடப்புக் கணக்கு 2026ஆம் ஆண்டில் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அதிகரித்து வரும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்கள் இந்த அழுத்தங்களை சமாளிக்க உதவுவதாகவும், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பலதரப்பு நிறுவனங்களின் நிதியுதவிகள் குறுகிய கால வெளிநாட்டு நிதி அழுத்தங்களை சமாளிப்பதற்கான ஆதரவை வழங்குவதாகவும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சர்வதேச சந்தையில் தொடர்ந்தும் சரியும் கச்சா எண்ணெய் விலை

உலகச் சந்தையில் WTI மற்றும் பிரண்ட் ரக கச்சா எண்ணெய் விலைகள் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளன.     இதற்கமைய, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை...

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி, இடைக்காலத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் பாரியளவில்...