கோட்டாபய ராஜபக்‌ஷ CCIB யில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தில் இன்று (9) முற்பகல் ஆஜராகியுள்ளார்.

 

 

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் அவரது பிரத்தியேக செயலாளராக சுகீஸ்வர பண்டார செயற்பட்டிருந்தார்.

 

 

இந்தக் காலப்பகுதியில் அவர் இரண்டு சம்பளங்களை பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி வாக்குமூலம் வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இன்னும் 4 மில்லியன் பேர் TIN இலக்கத்தை பெறவில்லை

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களில் மேலும் சுமார் 4 மில்லியன் பேர் TIN இலக்கத்தைப் பெற்றுப் பதிவாக வேண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித்...

அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாயம்

அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள பகுதிகளில் எதிர்வரும் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.       அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள...