9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் அதிக மழையுடன் கூடிய வானிலை காரணமாக நாட்டின் 9 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 

இதற்கமைய, பதுளை மாவட்டத்தின் பசறை, கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன, வலப்பனை, அம்பகமுவ கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

அத்துடன், கண்டி மாவட்டத்தின் உடுதும்பறை, உடுநுவர, தும்பன​ே மினிப்பே, யட்டிநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட, எலபாத, அயகம, வெலிகேபொல, கொடகவெல, கொலொன்ன, பலாங்கொடை, இரத்தினபுரி ஆகிய பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும் பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, சீதாவக்க, காலி மாவட்டத்தின் தவலம, எல்பிட்டிய, கரந்தெனிய மற்றும் களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, பாலிந்தநுவர, இங்கிரிய, புலத்சிங்ஹல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் முதலாம் கட்ட எச்சரிக்கையின் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, யட்டியாந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய, மாவன்னெல்ல, ருவன்வெல்ல, கேகாலை, வரகாப்பொல ஆகிய பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, ஹங்குராங்கெத்த மற்றும் மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் கோரியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கொழும்பு, துன்னான பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..

கொழும்பு, துன்னான பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..   ​மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட துன்னா பகுதியில் இன்று பெய்த கனமழை மற்றும்...

இன்னும் 4 மில்லியன் பேர் TIN இலக்கத்தை பெறவில்லை

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களில் மேலும் சுமார் 4 மில்லியன் பேர் TIN இலக்கத்தைப் பெற்றுப் பதிவாக வேண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித்...