உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி, இடைக்காலத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.

 

 

இத்தேர்தலில் எதிரணியான ஜனநாயகக் கட்சியிடம் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்திக்க நேரிட்டது.

 

 

இந்த சூழ்நிலையின் காரணமாக WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88 அமெரிக்க டொலருக்கும் கீழ் குறைந்துள்ளது.

 

 

புதிய தரவுகளின்படி, இது சுமார் 9% வீழ்ச்சியைப் பதிவு செய்து 87.76 டொலராகப் பதிவாகியுள்ளது.

 

 

மேலும், ப்ரென்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 9%-க்கும் மேல் சரிந்து 93.61 டொலராகக் குறைந்துள்ளது.

 

 

இத்தேர்தலில் குடியரசுக் கட்சி சந்தித்த தோல்விக்கு ஈரான் உடனான போர்ச் சூழலே நேரடிக் காரணம் என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார்.

 

 

துணை ஜனாதிபதியின் இந்த கூற்றைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இவ்வாறு வேகமாக சரிந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   இதற்கமைய, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.38...

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை நடத்த ஆயத்தமாகி வருவதாக வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாக...