கிங் கங்கையைச் சூழவுள்ள பல தாழ்நிலப் பகுதிகளுக்குச் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பதிவாகியுள்ள மழைவீழ்ச்சி நிலவரத்திற்கு அமைவாக, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, கிங் கங்கையைச் சார்ந்த தவலம, நாகொட, பத்தேகம மற்றும் வலிவிட்டிய – திவிதுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட கிங் கங்கைப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.


