ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் பலத்த இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த இடி மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
இடி மின்னலினால் ஏற்படும் அசம்பாவிதங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.
இந்த அறிவித்தல் இன்று (20) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


