அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல்

குவைத் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.

ஈரானின் கெஷ்ம் தீவில் அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய புரட்சிக்கர காவல் படை தெரிவித்துள்ளது.

கெஷ்ம் தீவில் உள்ள ஒரு கட்டிடம் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய குண்டுவீச்சில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு வயது குழந்தை உயிரிழந்தனர்.

ஜஞ்சான் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் புரட்சிக்கர காவல்படையின் மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டதை ஈரான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஈரானின் பல பகுதிகளில் அமெரிக்கத் தாக்குதல்களால் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகப் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், வடக்கு குவைத்தில் உள்ள சீன நிறுவனம் ஒன்றின் கட்டடம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டதாக குவைத் தெரிவித்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இந்தோனேசியாவில் மீண்டும் பதிவான நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இன்று (17) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் புளோரஸ் (Flores) பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர்...

இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகத்...