நிறுவன இரகசியத்தை விற்ற குற்றத்திற்கு ரூ.50 மில்லியன் நட்டஈடு!

தரப்பினருக்கு வழங்கவோ அவருக்கு இயலுமை இல்லை என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், வர்த்தக மேல் நீதிமன்றத் தீர்ப்பில் திருப்தியடையாத முறைப்பாட்டாளர் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

 

அதனை விசாரணை செய்த பின்னர், நீதிபதிகளான ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரின் உடன்பாட்டுடன் தமது தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன:

“வர்த்தக மேல் நீதிமன்ற விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை மேல் நீதிமன்ற நீதிபதி சரிவர பகுப்பாய்வு செய்யவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மூலம், எதிராளி பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அந்நிறுவனத்தின் உற்பத்தி, வணிக இரகசியங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தகவல்களை நிதி நன்மைக்காக மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்தியுள்ளார் என்பது உறுதி செய்யப்படுகிறது. அதற்கமைய, மனுதாரர் நிறுவனத்திற்குரிய காப்புரிமையின் படி இவ்வாறான உணர்வுப்பூர்வமான தகவல்களை வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதையோ அல்லது சுரண்டுவதையோ தடுத்து எதிராளிக்கு எதிராகத் தடையுத்தரவு பிறப்பிக்கத் தீர்மானிக்கிறேன்,” என உத்தரவிட்டார்.

மேல்முறையீட்டாளர் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 50 மில்லியன் ரூபாயாக மதிப்பிடப்படுவதாகவும், அதற்கமைய எதிராளி 50 மில்லியன் ரூபாய் தொகையையும் வழக்குக் கட்டணத்தையும் மேல்முறையீட்டாளர் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, 2019.03.29 அன்று கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாகவும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நாட்டின் பணவீக்கம் ஒகஸ்ட்டில் 8.1 ஆக உயர்வு

2026 ஒகஸ்ட் மாதத்திற்கான தேசிய முதன்மை பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு 8.1% ஆக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.   திணைக்களம்...

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்

நாட்டிற்கு வடகிழக்காக அந்தமான் பகுதிக்கு அருகில், வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக்...