புதிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் சிலவற்றின் நிர்மாணப் பணிகளைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச இவற்றை டிஜிட்டல் முறையில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
கொகுவளை சந்தி, கெட்டம்பே சந்தி, கொம்பனித்தெரு...
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து மேலும் 77 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, நுவரெலியா, மாத்தளை, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு,...
நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இதுவரை 14 பேர் மரணமாகியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் இரத்தினபுரி, கம்பஹாவில் 2 பேரை காணவில்லை என நிலையம் மேலும்...
விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பீ. ரோஹன புஷ்பகுமார தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் குறித்த பதவியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இவர் காலி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மாவட்ட செயலாளராக பணியாற்றிய...
மாவனெல்ல தெவனகல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண் திட்டு சரிந்து விழுந்ததில், நால்வர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர்.
கடந்த சில நாள்களாக பெய்த அடைமழையின் காரணமாகவே இந்த மண்திட்டு சரிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.
மண்ணுக்குள் தந்தை,...
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் இன்று (05) காலை 7.30 அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஹட்டனில் இருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக கொரோனா சடலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதற்குப் பாதுகாப்பு வழங்க...
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கசிந்துள்ள எண்ணெய் களனி கங்கையுடன் கலப்பதை தடுத்து நிறுத்துவதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக சப்புகஸ்கந்தவில் எண்ணெய் சுத்திகரிப்பு...
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 48 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (04) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...