வெள்ளவத்தை மற்றும் பாமன்கடையில் 07 மணித்தியால நீர் வெட்டு

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இன்று (06) இரவு 10.00 மணி முதல் நாளை (07) அதிகாலை 5.00 மணி வரை 7 மணித்தியாலங்களுக்கு வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

 

பெருங்கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ அபிவிருத்தி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமொன்றுக்கான அவசியமான அபிவிருத்தி பணிகளுக்காகவே இந்த நீர் துண்டிப்பு மேற்கொள்ளப்படுவதாக குறித்த சபை குறிப்பிட்டுள்ளது.

 

அதற்கமைய, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதி மக்கள் அவசியமான நீரை முற்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், காணப்படும் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

 

இந்த அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் தொடர்பாகவும் சபை தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாக அறிவிப்பு!

2019 உயிரத்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட...

அநுராதபுரத்தின் சில பகுதிகளுக்கு நாளை 8 மணி நேர நீர் வெட்டு!

கலா வாவி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (23) 08 மணித்தியாலங்களுக்குத் தற்காலிகமாக நீர் விநியோகம்...