உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 3-வது சுற்றும் சமநிலையானது

சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

 

போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷை, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ் எதிர்த்து விளையாடி வருகிறார்.

 

2 சுற்றுகள் சமநிலையில் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் 3-வது சுற்று நடைபெற்றது.

 

கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ் தொடக்கத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேரக்கட்டுப்பாடடிலும் முன்னிலை பெற்றார்.

 

அதேவேளையில் ஒரு கட்டத்தில் சிந்தரோவ் நேர நெருக்கடியில் சிக்கினார். இருப்பினும், சிறப்பாகத் தற்காத்துக் கொண்டார்.

 

5 மணி நேரம் நடைபெற்ற இந்த மோதல் 60 ஆவது நகர்த்தலின் போது சமநிலையில் முடிவடைந்தது.

 

3 சுற்றுகளின் முடிவில் இருவரும் தலா 1.5 புள்ளிகளுடன் உள்ளனர். இன்று 4ஆவது சுற்று நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இந்தியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை

ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய 'ஏ' அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஐந்தாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தடுமாற்றம்!

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி...