முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமையவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய, முன்னாள் அமைச்சர் இன்று (02) காலை இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார்.


