Date:

இந்தியாவில் பாரிய அழிவை ஏற்படுத்திய வைரஸ் இலங்கையில் அடையாளம்

இந்தியாவில் பரவி பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ள B.1.617.2  (டெல்டா) என்ற கொரோனா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.

இந்தியாவில் பரவும் டெல்டா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

குறித்த நபர் அம்பாந்தோட்டை – திஸ்ஸமஹராம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிரித்தானியாவில் பரவும் B117 (எல்பா) தொற்றினால் பாதிக்கப்பட்ட பலர் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

அதற்கமைய மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாப்பிட்டி, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமஹராம, கராப்பிட்டிய, ராகம ஆகிய பிரதேசங்களில் இருந்து இவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking: அதிகரிக்கும் போர் காரணமாக திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் விமானங்கள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான...

கட்டாரில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கியது ஈரான்

கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஏவுகணை நடவடிக்கை...

கட்டாருக்கு அச்சுறுத்தல்? வான்வெளியை மூடியது கட்டார்

கட்டாரில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து...

“பலஸ்தீனத்துக்கு வாழ இடங்கொடு”

சோசலிஸ இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் 'பலஸ்தீனத்துக்கு வாழ இடங்கொடு' எனும் தொனிப்பொருளின்...