Date:

ஓய்வூதிய கொடுப்பனவு; விஷேட போக்குவரத்து வசதி

ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்காக ஜூன் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் முப்படையினரால் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மாவட்ட / பிரதேச செயலகங்கள் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர்களின் வேண்டுகோளிற்கமைய அந்தந்த பகுதிகளில் உள்ள இராணுவ அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய முப்படையினரால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஓய்வூதியம் பெற்றுக் கொள்வோர் இந்த போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ள தத்தமது கிராம சேவை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டும் நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்த வேளையில் சுமார் 5 இலட்சத்துக்கு மேற்பட்ட வயோதிபர்கள் தமது ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முப்படையினர் இவ்வாறு போக்குவரத்து வசதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking பால் மாவின் விலை சடுதியாக குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள்...

கொழும்பில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

கொழும்பு 10 - டெக்னிகல் சந்திப்பு - ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில்...

ஈரான் ஜனாதிபதியின் வாக்குறுதி

  ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள...

Amazon Campus கல்வி நிறுவனத்துக்கு மேலும் இரண்டு UK அங்கீகாரம்

இலங்கையில் தரமான முறையில் பல பாடநெறிகளை வழங்குகின்ற UGC மற்றும் TVEC...