Date:

கொரோனா சிகிச்சையளிப்பு தாதியர்கள் எடுத்த அதிரடி தீர்மானம்

கொரோனா சிகிச்சையளிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள தாதியர்கள்
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு
தீர்மானித்துள்ளனர்.

31ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை
முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை தாதியர்
சங்கம் அறிவித்துள்ளது.

தாதியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய
அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எனினும்,
அப்பேச்சுவார்த்தைகளின் போது உரிய முறையில் தீர்மானங்கள்
எட்டப்படவில்லை. ஆகையால், அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இந்தத்
தீர்மானத்தை எட்டியதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

31ஆம் திகதி காலை முதல், ஜூன் 1ஆம் திகதி காலை வரையிலும் சுகயீன
விடுமுறையை பதிவுச் செய்து, தொழிற்சங்க நடவடிக்கைளில்
ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளதுது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

மத்திய கிழக்கிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதைத் (Al...

‘ஈரானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை’

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன எனவும் இனி எவ்வித சமரசத்திற்கும்...

ஈரானில் உலகப் பாரம்பரியத் தளம் சேதம் – UNESCO கவலை!

யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட, தெஹ்ரானில் உள்ள...

போர் பதற்றத்தால் தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள்...