Date:

தடுப்பூசியின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டாம் – ரணில்

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுக் கோட்பாடுகளை பின்பற்றுவதன்
ஊடாக கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்களையும், நாட்டையும்
முழுமையாக பாதுகாக்கலாமென நம்பிக்கை தெரிவித்துள்ள முன்னாள்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொரோனா தடுப்பூசியை வைத்துக்கொண்டு
பணம் சம்பாதிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

“கொரோனா தொற்று இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நாள்
தொடக்கம் இன்று வரையிலும் பல துறைகளைச் சேர்ந்தவர்களும் பாரிய
அர்ப்பணிப்புகளைச் செய்துவருகின்றனர். அவர்களை ஒருபோதும்
மறந்துவிடக்கூடாது” என்றார்.

வைத்திய துறையினர், தாதியர்கள், எனைய சுகாதார தரப்பினர்கள், கிராம
உத்தியோகத்தர்கள், பொலிஸார் உள்ளிட்டோரை நாம் மறக்கக் கூடாதெனத்
தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுகாதார தரப்பினர்,
கஷ்டப்பட்டு, நித்திரை விழித்து, நோயாளியாகுவது மட்டுமன்றி
உயிரிழப்பதால் சுகாதாரத்தறையே வீழ்ச்சியடைந்து வரும் நிலை
ஏற்பட்டுள்ளது என்றார்.

காணொளியில் பதிவொன்றை இட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, “போதுமான
அளவு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும் தேவை எமக்குள்ளது” என்றார். தடுப்பூசிகளைப் பெறவேண்டுமாயின் அந்நிறுவனங்களின் உத்தியோகப்பூர்வ பிரதிநிதிகள் ஊடாக மாத்திரமே பெறவேண்டும். ஏனையவர்கள், இக்காலத்தில் சிலவற்றை சம்பாதிக்கவே உள்ளனர்.

இதனை பணம் சம்பாதிக்கும் காலமாக மாற்றிக்கொள்ள வேண்டாமென கேட்டுக்கொண்டுள்ளரணில் விக்கிரமசிங்க, ஏனைய நாடுகளில் தற்போது 12 வயதுக்குமேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு ஆரம்பித்துள்ளது.

அப்படியாயின் இலங்கைக்கு 3 தொடக்கம் மூன்றரை கோடி தடுப்பூசி
மருந்துகள் தேவைப்படும் என்றார்.

இதேபோல, இரண்டாவது தடுப்பூசி தொகை கிடைக்கும் வரை நாம்
எம்மிடமுள்ள தடுப்பூசிகளை முகாமைத்துவம் செய்ய வேண்டும்.
தடுப்பூசிகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் உலக சுகாதார
ஸ்தாபனம் ஆலோசனைகளை வழங்கியுள்ளன. ஆனால், நாம்
அனைத்தையும் பின்பற்றுவதில்லை என்றார்.

“எதிர்காலம் குறித்தும் சிந்திக்க வேண்டும். இதனைக் கட்டுபடுத்த எவ்வித
மருந்துகளும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. எனவே குறித்த
விடயங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking பால் மாவின் விலை சடுதியாக குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள்...

கொழும்பில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

கொழும்பு 10 - டெக்னிகல் சந்திப்பு - ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில்...

ஈரான் ஜனாதிபதியின் வாக்குறுதி

  ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள...

Amazon Campus கல்வி நிறுவனத்துக்கு மேலும் இரண்டு UK அங்கீகாரம்

இலங்கையில் தரமான முறையில் பல பாடநெறிகளை வழங்குகின்ற UGC மற்றும் TVEC...