Date:

இன்று முதல் கொவிட் சடலங்கள் கிண்ணியாவிலும் அடக்கம்

கொரோனாவில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா வட்டமடு கிராம ‘கொவிட் 19 விஷேட மையவாடி’யில் இன்று 06 ஆம் திகதி சடலங்கள் நல்லடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இக் காணியில் சுமார் 4,000 சடலங்களை அடக்கம் செய்வதற்கான வசதியுள்ளதாகவும் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கே.எம்.நிஹார் தெரிவித்துள்ளார். இதற்காக 10 ஏக்கர் அரச காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இக்காணியை கொவிட் 19 தொழில்நுட்பக் குழு ஆய்வுகளை மேற்கொண்டு சிபாரிசு செய்ததையடுத்தே கொவிட் 19 செயலணியினாலும் சுகாதார அமைச்சினாலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்ந்தும் கூறியதாவது,..

தற்போது இக் காணியில் உட்கட்டமைப்பு வசதிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணிக்குள் 14 பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.

காணியை சூழ சுமார் 10 கிலோ மீற்றர் மதில் கட்டப்படவுள்ளது. மின்சார வசதிகள் மற்றும் சடலங்களின் உறவினர்களுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் கொவிட் 19 சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொவிட் 19 செயலணியின் தொழில்நுட்ப குழு இது தொடர்பில் ஆய்வுகளை நடத்தி வருவதாகவும் சுகாதார அமைச்சின் கொவிட் 19 ஒருங்கிணைப்பாளரும் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளருமான டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய விசா நடைமுறை அறிமுகம்

ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் ...

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலுமொருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த...

ஷாபி வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை – அத்துரலியே ரதன தேரர்

நாம் ஒருபோதும் இனவாதத்தினை தூண்டவில்லை என்பதோடு ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக...

சாதாரண தரப் பரீட்சை மே மாதம்- திருத்த பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர மீள் திருத்த பெறுபேறுகள் இவ்வருட சாதாரண தரப்...