ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி விலை 06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று (15) முதல் 243 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது.
அத்துடன், லங்கா சதொச பால் மாவின் 400 கிராம் பொதியின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1080 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.