பலத்த மின்னல் தொடர்பில் வௌியான எச்சரிக்கை

ஊவா மாகாணத்திற்கும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

 

 

இன்று (29) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும்.

 

 

இதற்கமைய, அப்பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடைக்கிடையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

மேலும், இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – டில்வின் சில்வா இடையே சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.   இந்த சந்திப்பு...

Passport எடுக்க இன்று முதல் இணையவழி நேர ஒதுக்கீடு கட்டாயம்!

பிராந்திய அலுவலகங்கள் ஊடாக ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்கும்போது, இன்று முதல் இணையவழியில் முன்கூட்டியே திகதி மற்றும்...