வெலிசறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளின் பிணை விண்ணப்பங்களையும், மேலும் இரண்டு பிரதிவாதிகளை விடுவிக்குமாறு அவர்களது சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) நிராகரித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
தமது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்தச் சந்தர்ப்பத்தில் பிணை விண்ணப்பங்களைக் பரிசீலிக்க முடியாது என நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


