கால்பந்தில் இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கும்

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன் திருமணம் முடிந்த கையோடு, அளித்த பேட்டியில் 2026-27 கால்பந்து சீசன் தனது தொழில்முறை வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கக்கூடும் என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

விளையாட்டை விட்டு விலகுவதற்கு முன்பு மகத்தான மரபினை விட்டுச்செல்ல விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகள் இணைந்து நடத்திய 2026 ஃபிஃபா உலகக்கிண்ணத்தில் தனது 6வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்ற பிறகு இந்த முக்கிய முடிவை நோக்கி நகர்ந்துள்ளார்.

தற்போது சவூதி அரேபியாவின் அல் நாசர் கிளப் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, கால்பந்திலிருந்து ஓய்வு பெற்ற அதிக நேரத்தை தன் குடும்பத்தினருடன் செலவிடவும், உலகம் முழுவதும் பயணம் செய்வதுடன் தனக்கு மிகவும் பிடித்தமான ‘பேடல்’ விளையாட்டை விளையாடவும் விரும்புவதாகக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பங்களா​தேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலம் வென்றது!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட்டில் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில், பங்களாதேஷ் அணியை 63 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்று வெண்கலப்...

வெண்கலத்துக்கான போட்டியில் இலங்கை அணி 165 ஓட்டங்கள் குவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் 3 ஆவது இடத்திற்கான (வெண்கலப் பதக்கம்) ஆட்டத்தில், பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய...