இலங்கை முதலாம் இன்னிங்ஸில் 446 ஓட்டங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை தமது முதலாம் இனிங்ஸில் 446 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

 

 

போட்டியில் நேற்றைய மூன்றாம் நாள் இடைநிறுத்தப்படும் வரையில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 404 ஓட்டங்களைக் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

 

 

எனினும் இன்றைய நான்காம் நாளில் வெறுமனே 42 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

 

 

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா மற்றும் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஆகியோர் நேற்றைய தினம் சிறப்பான சதங்களை பதிவு செய்தனர்.

 

ஆட்டத்தின் தொடக்கத்தில் பசிந்து சூரியபண்டார (0) மற்றும் தினேஷ் சந்திமால் (13) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்த போதிலும், லஹிரு உதார (42) மற்றும் கமிந்து மெண்டிஸ் (58) ஆகியோர் அணியை மீட்கப் போராடினர்.

 

 

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த தனஞ்சய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொண்டு நிதானமாகவும் அதிரடியாகவும் ஓட்டங்களைக் குவித்தனர்.

 

 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்சய டி சில்வாவும், குசல் மெண்டிஸூம் அணியை வலுவான நிலைக்கு கட்டியெழுப்பினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தனஞ்சய டி சில்வாவின் 14 ஆவது டெஸ்ட் சதம்

ராவல்பிண்டியில் நடைபெறும் இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனஞ்சய டி சில்வா தனது 14 ஆவது டெஸ்ட் சதத்தைப்...

முதலாம் டெஸ்ட் – இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (9) ஆரம்பமாகவுள்ளது.     ராவல்பிண்டி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய...