சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.

 

 

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சாமர சம்பத் தஸநாயக்கவின் பிரத்தியேக செயலாளர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனு மீதான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.

 

 

 

இதற்கு மேலதிகமாக, குறித்த வழக்கின் நான்காவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள தினேஷ் பெரேரா என்பவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவித்து, திறந்த பிடியாணையை பிறப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.   இதற்கமைய, உலகச்...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு

ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்