ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பானது இன்று (5) பிற்பகல் கொழும்பில் நடைபெற்றுள்ளது.

பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் மற்றும் இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய இருதரப்புத் திட்டங்களின் மீள்ஆய்வு குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பைத் தொடர்ந்து, ‘டித்வா’ புயலின் பாதிப்புகளுக்குப் பிறகு வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் மறுசீரமைப்புத் தொகுப்பின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் அமெரிக்க டொலருக்கு நிகரான ‘இந்திய ரூபாய் அடிப்படையிலான கடன் உதவி ஒப்பந்தங்களை இரு தரப்பும் பரிமாறிக்கொண்டன.

இக்கடன் உதவிகள் புயலுக்குப் பிந்தைய மறுசீரமைப்புப் பணிகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அவசியமான கொள்முதல் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு செல்ல தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அச்சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது...

முன்னாள் எம்.பியின் மனைவி மாடியிலிருந்து விழுந்து பலி

மொனராகலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி டேஷானி குணரத்ன திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தணமல்வில பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் அவர்...