குவைத் மீது ஈரான் தாக்குதல்; முக்கிய அரச கட்டமைப்புகள் சேதம்

குவைத் மீதான ஈரானின் தாக்குதல்களில் அந்த நாட்டின் முக்கிய அரச கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க படைகளின் தாக்குதல் மீண்டும் தொடர்ந்துள்ளதால், குவைத் உள்ளிட்ட அமெரிக்காவின் ஆதரவுபெற்ற வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

 

இந்த நிலையில், குவைத் எல்லையினுள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற ஈரானிய ட்ரோன்களை இடைமறித்து சுட்டுவீழ்த்தியதாகவும், வான் பாதுகாப்பு அமைப்பு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் குவைத் இராணுவம் அறிவித்துள்ளது.

இருப்பினும், குவைத்தின் வடக்கு மாகாணங்களில் ஈரானிய படைகள் நடத்திய தாக்குதலில், அரச கட்டமைப்புகள் மற்றும் புபியான் தீவின் மீதான தாக்குதலில் அங்குள்ள குடியிருப்புக் கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், எந்தவொரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், தாக்குதலில் சேதமடைந்த கட்டமைப்புகள் குறித்த முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, அமெரிக்காவுக்கு உளவுத் தகவல்களை அளிப்பதாகக் குற்றஞ்சாட்டி பஹ்ரைனிலுள்ள அமேசான் நிறுவனத்தின் தரவு மையங்களின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஹூதிகளை கட்டுப்படுத்த ஈரானிடம், சீனா கோரிக்கை

ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த உதவுமாறு சீனா, ஈரானிடம் ரகசியமாக கோரியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.   ஹூதிகள் கடந்த வாரம் மேற்கொண்ட...

அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சி

சர்வதேச மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வருவதைத் தடுக்கவும், தற்காலிக குடியேற்ற விசாக்களை மாற்றுவதற்கான விதிகளை...