இலங்கைக்கு முதல் தங்கத்தைப் பெற்றுக் கொடுத்த ருமேஷ் தரங்க

பொதுநலவாயப் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் முதலாவது தங்கப் பதக்கத்தை ருமேஷ் தரங்க பெற்றுக் கொடுத்துள்ளார்.

 

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்றுவரும் போட்டிகளில் இன்று நள்ளிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் 89.75 மீற்றர் தூரம் எறிந்து, 85.83 மீற்றர் தூரம் எறிந்த டோக்கியோ 2020 ஒலிம்பிக் சம்பியனான நீரஜ் சோப்ராவைத் தாண்டியே தரங்க தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

 

இதேவேளை 85.41 மீற்றர் தூரம் எறிந்த இந்தியாவின் யாஷ் வீர் சிங் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றிருந்தார்.

 

இந்நிலையில் நடப்பு ஒலிம்பிக் சம்பியனான அர்ஷாட் நதீம் 77.41 மீற்றர் தூரமே எறிந்து ஒன்பதாமிடத்தையே பெற்றிருந்தார். பரிஸ் 2024-இல் வெண்கலப் பதக்கம் வென்ற கிரெனடாவின் அன்டர்சன் பீற்றர்ஸ் 83.88 மீற்றர் தூரம் எறிந்து நான்காமிடத்தைப் பெற்றிருந்தார்.

 

2006ஆம் ஆண்டு மெல்பேண் பொதுநலவாயப் போட்டிகளில் பாரம் தூக்கல் வீரரான சிந்தன விதானகே தங்கப் பதக்கம் வென்ற பின்னர் பொதுநலவாயப் போட்டிகளில் இலங்கை தற்போது தரங்க மூலமே தங்கப் பதக்கத்தை வெல்கிறது.

 

தரங்க முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஆசிய விளையாட்டுப் போட்டி: தங்கப் பதக்கப் போட்டிக்குத் தகுதி பெற்றது இலங்கை...

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் பிரிவில், தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டிக்கு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தகுதி...

ஆசிய விளையாட்டு போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.   இன்று (18) இடம்பெற்ற...