அனோஜனுக்காக பாராளுமன்ற விசேட தூதுக்குழு சவூதிக்கு- விஜித

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை பாராளுமன்ற தூதுக்குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது.

 

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றில் இன்று (22) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

 

நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலியின் தலைமையில் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ள குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் உள்வாங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

அந்த விசேட தூதுக்குழு சவூதி அரேபிய மன்னரைச் சந்திக்கவுள்ளது.

 

இதன்போது சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியிலான பொது மன்னிப்பை வழங்குமாறு கோரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அனுப்பி வைக்கப்படும் கடிதத்தையும் அந்தக் குழு சவூதி அரேபிய மன்னரிடம் கையளிக்கவுள்ளது.

 

அதேநேரம் சிவராசா அனோஜன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாகச் சட்டரீதியாக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளமையினால், அவரது வழக்கிற்காக இதுவரை ஏற்பட்ட மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அனைத்துச் செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்கும் எனக் குறிப்பிட்டார்.

 

இதனடிப்படையில் அவரது குடும்பத்தினரிடமிருந்து மேன்முறையீட்டிற்காகப் பெறப்பட்டிருந்த பணமும் மீண்டும் கையளிக்கப்படும் என்றும், அவரை விடுவிப்பதற்கான அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

2027 ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.   குறிப்பிட்ட சட்டமூலத்திற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்த நிலையில், அது நேற்று (21)...

22 வது திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் இல்லை

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானதும் இல்லை என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் இன்று...