மகாவலி கங்கையில் நீராடச் சென்ற மாணவன் மாயம்

கம்பளை நகரிலுள்ள முன்னணிப் பாடசாலையொன்றில் 10ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன், கம்பளை – உடோவிட்ட பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மகாவலி கங்கையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி மாயமாகியுள்ளதாக கம்பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இவ்வாறு மாயமானவர் உடோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த கம்பளை கங்கசிரிபுர கங்கசிரிபுர வித்யாலயத்தில் கல்வி பயிலும் கல்பித கரசிங்க என்ற மாணவனாவார்.

 

தற்போது பாடசாலையில் நடைபெற்று வரும் தவணைப் பரீட்சை முடிந்ததும் (வீட்டிற்கு) வந்த இம்மாணவன், கிராமத்தைச் சேர்ந்த மேலும் சிலருடன் இணைந்து இவ்வாறு கங்கைக்குச் சென்றுள்ளார்.

 

இவர்கள் நீராடிய இடத்தில் மணல் அகழப்பட்டதால் பல அடி ஆழம் ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் நீர்ரோட்டம் அதிகமாக காணப்படுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு செல்ல தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அச்சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது...

முன்னாள் எம்.பியின் மனைவி மாடியிலிருந்து விழுந்து பலி

மொனராகலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி டேஷானி குணரத்ன திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தணமல்வில பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் அவர்...