தற்கொலை செய்துகொள்ளும் பொலிஸ் அதிகாரிக்கு பொலிஸ் மரியாதை வழங்கப்படமாட்டாது

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள், முழுமையான பொலிஸ் மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் திங்கட்கிழமை (20) நடைபெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர், மாலபே, தலஹேன, பராக்கிரம மாவத்தையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, கடந்த 17 ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

இருப்பினும், பொலிஸ் ஒழுக்கக் கோவைகளின்படி, தற்கொலை செய்துகொள்ளும் எந்தவொரு பொலிஸ் அதிகாரிக்கும் பொலிஸ் மரியாதை வழங்கப்படமாட்டாது என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், குறித்த மரணம் தொடர்பாக இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்தார்.

சி. டி. விக்ரமரத்ன இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

காலியிலும் வெள்ளம்

அடுத்த 24 மணிநேரத்தில் காலி மாவட்டத்தின் தவலம, நாகொட, பத்தேகம மற்றும் வெலிவிட்டிய-திவிதுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட கின் கங்கை...

அனோஜனை விடுதலை செய்யக் கோரி சவூதி அரேபியாவுக்கு வேண்டுகோள்!

அனோஜனை விடுதலை செய்யக் கோரி சவூதி அரேபியாவுக்கு வேண்டுகோள்   சமூகச் செயற்பாட்டாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்   நூருல் ஹுதா உமர்   சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கையைச்...