சானிட்டரி நாப்கின்களை விற்பனை செய்யத் தடை

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களில் (Sanitary Napkins) ‘SLS’ தரச்சான்றிதழ் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, SLS தரச்சான்றிதழ் இல்லாத உள்நாட்டு சானிட்டரி நாப்கின்களை உற்பத்தி செய்தல், பொதியிடல், விநியோகித்தல், போக்குவரத்து செய்தல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு 2026 ஒக்டோபர் 08 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 12 (2) ஆம் பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் (SLSI) வழங்கப்படும் ‘SLS’ தரச்சான்றிதழ் முத்திரையைக் கொண்ட தயாரிப்புகளை மட்டுமே இனி சந்தையில் விற்பனை செய்ய முடியும்.

இந்த உத்தரவானது குறிப்பாகக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வகை தயாரிப்புகளுக்கும் பொருந்தும்:

ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி நாப்கின்கள் (SLS 1732).

ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய மெல்லிய சானிட்டரி நாப்கின்கள் (SLS 1748).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

காலியிலும் வெள்ளம்

அடுத்த 24 மணிநேரத்தில் காலி மாவட்டத்தின் தவலம, நாகொட, பத்தேகம மற்றும் வெலிவிட்டிய-திவிதுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட கின் கங்கை...

அனோஜனை விடுதலை செய்யக் கோரி சவூதி அரேபியாவுக்கு வேண்டுகோள்!

அனோஜனை விடுதலை செய்யக் கோரி சவூதி அரேபியாவுக்கு வேண்டுகோள்   சமூகச் செயற்பாட்டாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்   நூருல் ஹுதா உமர்   சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கையைச்...