Date:

மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதியிடம் மஹஜர்

டயகம சிறுமி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதியிடம் மஹஜர் ஒன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டயகம 3 ஆம் பிரிவை சேர்ந்த ஜூட்குமார் ஹிசாலினி முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதினின் வீட்டுக்கு வேலைக்காகச் சென்ற நிலையில் கடந்த 15 ஆம் திகதி எரிகாயங்களுடன் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவத்திற்கு எதிராக மலையகத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஹட்டன் மெத்தடிஸ் சிறுவர் இல்லத்தில் சிறுவர்கள் ஜனாதிபதியிடம் மஹஜர் ஒன்றை கையளிப்பதற்காக நேற்று மாலை கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டனர்.

டன்பார் வீதியில் ஹட்டன் ஹைலன்ட் கல்லூரிக்கு அருகாமையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் விலை அதிகரிப்பு;விலைப்பட்டியல்

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்ற வகையில் எரிபொருள் விலைகளை...

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும், தெரு நாடகம் நடத்தி பொலிஸாரின் கடமைக்கு இடையூறு...

தங்க முலாம் துப்பாக்கி: துமிந்தவின் பிணை மனுவுக்கு திகதி குறிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தாக்கல் செய்த மனுவை...

கொழும்பில் அதிகரித்த பணவீக்கம்!

2025 ஜூன் மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு...