தேசியப்பட்டியல் எம்.பியாக ரஞ்சித் மத்தும பண்டார

ஐக்கிய மக்கள் சக்தியின் ஐந்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரை தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

காஞ்சனவின் பெயர் முன்மொழிவு

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,  எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் மின்சக்தி அமைச்சர் காஞ்சன...

ரவி கருணாநாயக்கவின் வீட்டுக்கு பாதுகாப்பு

தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பான விவகாரம் சூடுபிடித்துள்ளதை அடுத்து,  ரவி கருணாநாயக்கவின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் நாடாளுமன்றத்திற்கு ரணில்?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாக அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கவுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. இதன்படி,...

முதலாவது அமைச்சரவைக் கூட்டம்

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. 22 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை நேற்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. இதேவேளை, புதிய அரசாங்கத்தின்...

வெளியேறுகின்றனர் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் எம்.பிக்கள்

பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெலவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் இருந்து வெளியேறியதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை 30 பேர் வெளியேறியதாகவும், மேலும் 80 பேர் வெளியேறப் போகிறார்கள்...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக் கூடும்

மேல், சபரகமுவ மற்றும் வடமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும்...

விஜித ஹேரத்திற்கு ஜெய்சங்கர் வாழ்த்து

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜித ஹேரத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை...