இடைநிறுத்தப்பட்ட பரீட்சை 10 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும்

  வடமத்திய மாகாணத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 11ஆம் தரத்தில் விடுபட்டதாகக் கூறப்படும் பாடங்கள் தொடர்பான தவணைப் பரீட்சைகள் 10 நாட்களுக்குள் நடத்தப்படும் என வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டதாக கூறப்படும் வினாத்தாள்கள் திருத்தப்படும்...

சீனாவின் வைரஸ் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள...

04 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (07)  தரையிறங்க வந்த 04 விமானங்கள், அடர்ந்த கடும் பனிமூட்டம் காரணமாக  கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையை சரியாக பார்க்க முடியாததால் மத்தள மற்றும்...

புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று

2025 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டத்தில்...

கல்கிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ வட்டரப்பல வீதியைச் சேர்ந்த...

Breaking சீனாவில் வேகமாக பரவும் HMPV வைரஸ் ; இந்தியாவில் பரவியது

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. எச்.எம்.பி.வி என...

மீண்டும் தலை தூக்கும் கடவுச்சீட்டு பிரச்சினை

புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை அரசாங்கம் இதுவரை வழங்காத நிலையில், கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடருமானால், இலங்கையர்கள் பணி நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்  எச்சரித்துள்ளது. எதிர்வரும்...

Online இல் வியாபாரம் செய்த முஹம்மட் நப்லான் மரணம்

அலைபேசி ஊடாக  online  வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் சாய்ந்தமருது 11 உடையார் வீதியில் வசித்து வந்த முஹம்மட் நயீம் முஹம்மட் நப்லான் (வயது  20 ) என்ற  இளைஞனே  விரக்தி அடைந்த நிலையில் ஒரு வகையான மாத்திரைகள் உட்கொண்டு சிகிச்சை பலனளிக்காமையின் காரணமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை மரணமடைந்துள்ளார். குறித்த மரணமடைந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சவளக்கடை   பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.மேலும் மரணம் அடைந்த இளைஞன் சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். மரணமடைந்த இளைஞரின் தந்தை தனது மகன் வெளிநாட்டில் தொழில் புரிவதற்கான முன்னாயத்தங்கள் மேற்கொண்டதாகவும் அதற்காக அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக சேர்த்ததாகவும் இதன்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான அலைபேசி   online ஊடாக  புதிய வகை வியாபார உத்திகள் உருவாக்கப்பட்டு   கொடுக்கல் வாங்கல்  இளைஞர் முதல் பல்வேறு தரப்பினரை இலக்கு வைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறித்த online  வியாபாரம் சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அதில் ஆர்வம் கொண்டு பல இளைஞர்கள் முதல் பலர்  பங்கேற்று வருகின்றனர்.