நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணை நடைபெறுவதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவிப்பு.
தனிமைப்படுத்தல் ஊடரங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை இன்று(23) ஆரம்பிக்கப்படவுள்ளது.
கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என...
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 502 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன். தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 56,796 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, மேல்மாகாண...
நாட்டில் நேற்று(22) கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 4,304 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இதுவரை பதிவான அதிகபட்ச நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 390,000ஆக உயர்ந்துள்ளது.
நாளை முதல் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும் என இராஐங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் லீட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்தையின் பின்னர் ஊடகங்களுக்கு...