இதனையடுத்து, குறித்த வீடியோவை எடுத்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன், கைதுசெய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேக நபரை நீதிமன்றில் இன்று(11) முன்னிலைப்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.
இலங்கையின் சட்டத்துக்கு அமைய சிறுவர்களுக்கு மதுபானம், புகைத்தல் பொருட்கள் உள்ளிட்டவைற்றை பெற்றுக்கொடுப்பது, வழங்குவது பாரிய குற்றம் என்றும் அவர் குறிப்பிட்டார்.