Date:

பிள்ளையை வைத்து போதைப்பொருள் கடத்தல்

தங்களது ஐந்து வயது பிள்ளையை ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஒரு ஆடம்பர காரில் கண்டி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த தம்பதியினரை கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் 22 லட்சம் பணம் உட்பட 60 கிராம் போதை பொருளுடன் இன்று காலை 10 மணியளவில் கண்டி லுவி பீரிஸ் மாவத்தையில் வைத்து கைது செய்தனர்.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், தம்பதியினர் ஐந்து வயது பிள்ளையை ஒரு துணியில் போர்த்தி ஒவ்வொரு இடத்திற்கா சென்று பொலிஸாரை தவறாக வழிநடத்தி, மோசடியை செயல்படுத்தினர்.

வாகனத்தில் இருந்தபோது பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட பிள்ளை 40 வயதுடைய பெண்ணின் முதல் திருமணத்தின் பிள்ளை என்பது பொலின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபரான, 40 வயதான பெண் தன்னுடைய கள்ளக்காதலுடன் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்தே இந்த மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் கண்டியில் உள்ள முன்னணி பாடசாலையில் கல்வி கற்றுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயின் மதிப்பு சுமார் 6 மில்லியன் ரூபாய் என்று கண்டி பொலிஸ் நிலைய பொருப்பாதிகாரி சமரநாயக்க தெரிவித்தார்.

கண்டி பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளான சமில் ரத்நாயக்க மற்றும் பலியவடன , கண்டி பொலிஸ் காவல்துறை தலைமை ஆய்வாளர் துசித ஹலங்கொட, அவர்களின் அறிவுறுத்தலின்படி குற்ற தடுப்பு பிரிவின் தலைமை ஆய்வாளர் சமரநாயக்க மற்றும் உதவி தலைமை ஆய்வாளர் செமசிங்ஹ ஆகியோரினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்படும்- அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு பின்னர் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்படும்...

தனுஷ்க குணதிலக்க விடுவிப்பு!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில்...

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியிருக்கும் 115 உணவுக் கொள்கலன்கள் வீணாகும் அபாயம்

கொழும்பு துறைமுகத்தில் உணவுப் பொருட்கள் அடங்கிய 115 கொள்கலன்களில் உள்ள பொருட்கள்...

இலங்கையில் பணிபுரியும் பெண்களை தாக்கும் ஆபத்து

இலங்கையில் பணி புரியும் பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய்...