Date:

நெதர்லாந்து அணி அபார வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையில் இன்று (09) நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி 07 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

டெல்லியில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பாடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

நமீபியா அணி சார்பில் ஜான் நிக்கோல் லோஃப்டி ஈடன் அதிகபட்சமாக 42 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் நெதர்லாந்து அணி சார்பாக லோகன் வான் பீக் மற்றும் பாஸ் டி லீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் பெற்று கொடுத்தனர்.

இந்நிலையில் 157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 18 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

நெதர்லாந்து அணி சார்பில் பாஸ் டி லீட் அதிகபட்சமாக 72 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் நமீபியா அணி சார்பாக பெர்னார்ட் ஷோல்ட்ஸ், ரூபன் டிரம்பல்மேன் மற்றும் ஜான் நிக்கோல் லோஃப்டி ஈடன் ஆகியோர் தலா 1 விக்கெட்டு வீதம் பெற்று கொடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...