Date:

ஏன் நீண்ட நேர ஒன்லைன் வகுப்புகள்? புகார் அளித்த 6 வயது சிறுமி

காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி மஹிரா இர்ஃபான், நீண்ட நேரம் ஒன்லைன் வகுப்புகள் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு நிறைய வேலை கொடுப்பதாகவும் பிரதமர் மோடியிடம் புகாரளித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவலால் உலகெங்கிலும் உள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது பலருக்கும் அன்றாட வாழ்க்கை நடைமுறையில் இருந்து பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரிகள் மூடியதால், குழந்தைகள் மாணவர்களுக்கு ஒன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி, நீண்ட நேர ஒன்லைன் வகுப்புகளால் விரக்தியடைந்து பிரதமர் மோடியிடம் புகாரளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வெறும் 45 விநாடிகளே ஓடக்கூடிய அந்த வீடியோவில் சிறுமி பேசியதாவது:
எனது ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை தொடர்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது மற்றும் சுற்றுச்சூழல் கல்வி அதன்பின்னர் கணினி வகுப்பும் உள்ளது. குழந்தைகளுக்கு நிறைய வேலை இருக்கிறது. சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும்?. என்ன செய்ய முடியும் மோடி ஐயா?. என்று அந்தச் சிறுமி பேசியது வைரலானது.
அதாவது சிறுமி மஹிரா இர்ஃபானுக்கு பெற்றோர் செல்போன் வழங்கியதே ஆன்லைன் வகுப்புகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையில்தான். ஆனால் பணிச்சுமை, ஹோம்வொர்க், நீண்ட நேர ஆன்லைன் வகுப்புகளினால் சோர்வடைந்த சிறுதி மஹிரா இதை நேரடியாகப் பிரதமரிடமே புகார் அளித்து விட்டார்.
இந்த வீடியோவைப் பார்த்த தந்தை தன் நண்பர்களுடன் இதை வாட்ஸ் அப் செயலியில் ஷேர் செய்தார். ஆனால் அப்போது தங்கள் குழந்தை இணையதளப் பரபரப்பாவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
தற்போது இது ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் கவனத்துக்கும் சென்றுள்ளது. துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, குழந்தையைப் பாராட்டி ட்வீட் செய்த போது, “குழந்தைப் பிராய வெகுளித்தனம் என்பது கடவுள் தந்த பரிசு. அவர்களின் அந்த சிறுபிராயம் மகிழ்ச்சியுடனும் உயிரோட்டத்துடனும் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாய்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த...

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு நோட்டீஸ்

முன்னாள் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக...

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர்...

பாட்டளிக்கு சிஐடி அழைப்பு

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க...