Date:

ஏன் நீண்ட நேர ஒன்லைன் வகுப்புகள்? புகார் அளித்த 6 வயது சிறுமி

காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி மஹிரா இர்ஃபான், நீண்ட நேரம் ஒன்லைன் வகுப்புகள் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு நிறைய வேலை கொடுப்பதாகவும் பிரதமர் மோடியிடம் புகாரளித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவலால் உலகெங்கிலும் உள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது பலருக்கும் அன்றாட வாழ்க்கை நடைமுறையில் இருந்து பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரிகள் மூடியதால், குழந்தைகள் மாணவர்களுக்கு ஒன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி, நீண்ட நேர ஒன்லைன் வகுப்புகளால் விரக்தியடைந்து பிரதமர் மோடியிடம் புகாரளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வெறும் 45 விநாடிகளே ஓடக்கூடிய அந்த வீடியோவில் சிறுமி பேசியதாவது:
எனது ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை தொடர்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது மற்றும் சுற்றுச்சூழல் கல்வி அதன்பின்னர் கணினி வகுப்பும் உள்ளது. குழந்தைகளுக்கு நிறைய வேலை இருக்கிறது. சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும்?. என்ன செய்ய முடியும் மோடி ஐயா?. என்று அந்தச் சிறுமி பேசியது வைரலானது.
அதாவது சிறுமி மஹிரா இர்ஃபானுக்கு பெற்றோர் செல்போன் வழங்கியதே ஆன்லைன் வகுப்புகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையில்தான். ஆனால் பணிச்சுமை, ஹோம்வொர்க், நீண்ட நேர ஆன்லைன் வகுப்புகளினால் சோர்வடைந்த சிறுதி மஹிரா இதை நேரடியாகப் பிரதமரிடமே புகார் அளித்து விட்டார்.
இந்த வீடியோவைப் பார்த்த தந்தை தன் நண்பர்களுடன் இதை வாட்ஸ் அப் செயலியில் ஷேர் செய்தார். ஆனால் அப்போது தங்கள் குழந்தை இணையதளப் பரபரப்பாவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
தற்போது இது ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் கவனத்துக்கும் சென்றுள்ளது. துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, குழந்தையைப் பாராட்டி ட்வீட் செய்த போது, “குழந்தைப் பிராய வெகுளித்தனம் என்பது கடவுள் தந்த பரிசு. அவர்களின் அந்த சிறுபிராயம் மகிழ்ச்சியுடனும் உயிரோட்டத்துடனும் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், அல்லது 'பிள்ளையான்', மட்டக்களப்பு சிறையில்...

வடக்கு ரயில் மார்க்கத்தின் கால அட்டவணையில் திருத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் இயங்கும் ரயில் கால அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு...

‘100 வயதை கடந்த கம்பீரம்’: ‘வத்சலா’ மரணம்

ஆசியாவின் மிக வயதான யானையான 'வத்சலா', மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா...

பொத்துவில் மண்ணை ஒற்றுமைப்படுத்தி மீண்டும் கெளரவப்படுத்திய ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA). கிழக்கு மண்ணில் உதயமாகி, தேசியத்தில் விருட்சமாகத் திகழும் ஸ்ரீலங்கா...