Date:

நாட்டில் வருடாந்தம் 60,000 பேர் பாரிசவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்!

இன்று உலக பாரிசவாத தினமாகும். இம்முறை “ஒரு நொடியும் தாமதியோம், வாழ்க்கையை நிறைவுசெய்ய இடமளியோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 60,000 பாரிசவாத நோயாளர்கள் பதிவாவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பாரிசவாத நோயாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பதிவாகும் ஆறில் ஒரு மரணத்துக்கு பாரிசவாதமே முக்கிய காரணமாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில், மக்களை அங்கவீனப்படுத்தும் மிக முக்கிய காரணிகளில் பாரிசவாதமானது 5 ஆவது இடத்தில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் 13.7 மில்லியன் மக்கள் பாரிசவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 5.5 மில்லியன் பேர் மரணிக்கின்றனர்.

இதயத்திலிருந்து மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பினால் பக்கவாதம் ஏற்படுவதாகவும், நோய் அறிகுறிகள் இனங்காணப்படும் முதல் சந்தர்ப்பத்திலேயே உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கயந்த கருணாதிலக்க இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

வாக்குமூலம் பெறுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல்...

முட்டை விலை தொடர்பாக வெளியான அறிவிப்பு

பண்டிகைக் காலப்பகுதியில் முட்டையின் விலை அதிகரிக்கும் என சிலர் வௌியிடும் கருத்துக்களில்...

இலங்கைக்கு இரங்கல் தெரிவித்த பாப்பரசர்

திட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு பாப்பரசர் லியோ தனது...

பதுளையில் மேலும் 238 குடும்பங்கள் வௌியேற்றம்!

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த...