Date:

“Take Care – வீதிகளைப் பாதுகாப்போம்” | விபத்துக்களை தடுக்க அமுலாகும் திட்டம்!

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாகன விபத்துக்களை தடுத்து, வீதிகளை அனைவருக்கும் பாதுகாப்பான இடங்களாக மாற்றுவதற்காக பாடசாலை மாணவர்களை அடிப்படையாக கொண்ட “Take Care – வீதிகளைப் பாதுகாப்போம்” எனும் தலைப்பிலான தெளிவுபடுத்தல் திட்டத்தை பாடசாலை மட்டத்தில் அமுல்படுத்தும்  திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இந்த திட்டம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, ஸ்ரீலங்கா பொலிஸ் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அமுல்படுத்தவதற்கு வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு திட்டமிட்டுள்ளது.

பாடசாலை வாகன ஒழுங்குபடுத்தல் அணிகள் மற்றும் மாணவ தலைவர்களை இணைத்து, 100 கல்வி வலயங்களில் உத்தேச திட்டம் அமுல்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கல்வி வலயத்திலிருந்து தலா 500 மாணவர்கள் என்ற ரீதியில் 50,000 மாணவர்களை நேரடியாக நிகழ்ச்சித்திட்டத்தில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வையில் தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு மூலம் உத்தேச திட்டத்தை அமுல்படுத்துவதற்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...