அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினர் தங்கள் சொந்த நாட்டுக்கும் ஏனைய நாடுகளுக்கும் பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பான மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ‘கிறீன்காட்’ (நிரந்தர குடியுரிமை) பெற்றவா்கள், ‘எச்1பி’ மற்றும் ‘எச்-2ஏ’ போன்ற தற்காலிக நுழைவு விசாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள், தங்களின் சொந்த நாடு உட்பட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் இந்த வரி விதிக்கப்பட உள்ளது.
இந்த வரி அமெரிக்கர்கள் மேற்கொள்ளும் எந்த வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய வரி, அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான செலவைக் கணிசமாக உயா்த்தும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.