Date:

பண்டிகைக் காலங்களில் சோதனை நடவடிக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

கடந்த 10 நாட்களில் நாடளாவிய ரீதியில் 578 அரிசி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சில இடங்களில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த முறைப்பாடுகளின் பிரகாரம், மாவட்ட மட்டத்திலான அதிகாரிகளினால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதன் பதில் பணிப்பாளர் நாயகம் திலகரட்ன பண்டா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும், அந்த குறைபாட்டிற்கான நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், சந்தையில் அரிசி கிடைப்பது படிப்படியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் தொடர்பிலும் சோதனைகள் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் கிளர்ச்சியைத் தூண்ட நினைத்த முயற்சிக்கு மாறாக, இன்று அமெரிக்காவின் சொந்த மண்ணிலேயே வரலாறு காணாத போராட்ட அலை…

ஈரானில் கிளர்ச்சியைத் தூண்ட நினைத்த முயற்சிக்கு மாறாக, இன்று அமெரிக்காவின் சொந்த...

எரிபொருள் விலையேற்றத்தால் பொதுப் போக்குவரத்து இலவசம்

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக அதிகரித்து வரும் எரிபொருள் விலையினால் பொதுமக்கள்...

இஸ்ரேலிய – அமெரிக்க பல்கலைக்கழகங்களை தாக்குவோம் – IRGC எச்சரிக்கை

மத்திய கிழக்கிலுள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரானின்...

Breaking சமாதான முன்மொழிவை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரிப்பு

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த சமாதான முன்மொழிவை ஈரான்...